fbpx
Connect with us

Cinemapettai

கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் பாதியில் நின்றது.. யார் பார்த்த வேலை தெரியுமா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் பாதியில் நின்றது.. யார் பார்த்த வேலை தெரியுமா

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் KGF chapter 1 படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ரிலீஸாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சுமார் 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 250 கோடி வரை வசூல் செய்தது. கன்னட புகழ் “ராக்ஸ்டார்” யாஷ் அதிரடியாக நடித்த இப்படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வரவேற்பு பெற்றது. KGF படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் வெளியாவதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்த சூழ்நிலையில் கேஜிஎப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதைக்கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். காரணம் பின்வருமாறு:-

KGF படத்தின் இரண்டாம் பாகத்திற்கான செட் ஒன்று கோலார் தங்க வயலில் உள்ள cyanide hills என்ற இடத்தில் போடப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகளுடன் அப்பகுதியில் ஷூட்டிங் நடைபெற்று வந்தது.

இதனால் அப்பகுதியில் இயற்கை வளம் அழிந்து உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் கேஸ் போட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த JMFC நீதிமன்றம், உடனடியாக படப்பிடிப்பை நிறுத்துமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் யாஸ் ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.

சொன்ன தேதிக்கு படம் வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top