Tamil Cinema News | சினிமா செய்திகள்
கே ஜி எஃப் 2 பட டீசர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மிரட்டல் போஸ்டரில் ராஜா போல் கெத்தாக இருக்கும் யாஷ்
உலகமே கன்னட சினிமாவை கேலி செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்திய சினிமாவுக்கே அடையாளமாக கேஜிஎஃப் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி அனைவரையும் மிரள வைத்தனர்.
கேஜிஎஃப் படத்தின் பிரம்மாண்ட வெற்றி நடிகர் யாஷ்க்கு இந்திய சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தது என்றால் மிகையாகாது. கேஜிஎஃப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது.
சமீபத்தில்தான் கே ஜி எஃப் 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
தற்போது அதற்கான விடையை அதிரடி போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது kgf படக்குழு. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி 10:18க்கு வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

kgf2-teaser-date-cinemapettai
அறிவிப்பு போஸ்டரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரண்டு மடங்காக அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ராஜபார்வையில் கெத்தாக அமர்ந்திருக்கும் யாஷ் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கேஜிஎஃப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாசை வைத்து சலார் படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படமும் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
