fbpx
Connect with us

Cinemapettai

அமேசானில் வெளியாகும் கே ஜி எஃப் 2.. படத்தின் விலையை கேட்டு அதிர்ந்த இந்திய சினிமா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அமேசானில் வெளியாகும் கே ஜி எஃப் 2.. படத்தின் விலையை கேட்டு அதிர்ந்த இந்திய சினிமா

கன்னட சினிமாவை உலகமெங்கும் கொண்டாட வைத்த புகழ் கே ஜி எஃப் படத்தையே சாரும். இதுவரை இல்லாத அளவுக்கு கன்னட சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம்.

நடிகர் யாஷ்(Yash) நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் செம வரவேற்பு பெற்றது.

அதுமட்டுமில்லாமல் சிறந்த சண்டை பயிற்சி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகியவைகளுக்கு தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே.

அக்டோபர் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருந்த கேஜிஎப் சாப்டர் 2 தற்போது நிலவிவரும் கொரானா சூழ்நிலையால் வெளியீட்டில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த வருடம் முழுதும் தியேட்டரில் வெளியிட முடியாத நிலைமை.

இந்நிலையில் ஏற்கனவே கேஜிஎப் சாப்டர் ஒன் படத்தை வாங்கிய அமேசான் நிறுவனம் கேஜிஎப் சாப்டர் 2 படத்திற்கும் அடி போட்டுள்ளது. ஐந்து மொழிகளுக்கும் சேர்த்து 350 கோடி விலை பேசி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆனால் படத்தின் ஹீரோ யாஷ், முடிந்தவரை கேஜிஎப் சாப்டர் 2 படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறோம் எனக் கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்திய சினிமாவே பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சில படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top