Reviews | விமர்சனங்கள்
சிங்கம் போல் கர்ஜிக்கும் யாஷ், கேஜிஎஃப் 2 எப்படி இருக்கு? அனல் பறக்க வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்
திரையுலகினரால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் என்று உலக அளவில் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

kgfchapter2-review
பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகமும் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது.

kgfchapter2-review
100 கோடி பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தைப் பற்றிய தங்கள் கருத்துக்களை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாகாமல் திருப்தி அளிக்கும் வகையில் மாஸாக இருப்பதா கூறுகின்றனர்.

kgfchapter2-review
மேலும் படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட காட்சிகளும், உணர்ச்சி பூர்வமான பல வசனங்களும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த படத்திற்காக டைரக்டர் எந்த அளவுக்கு கடுமையாக உழைத்துள்ளார் என்பது திரையில் நன்றாகவே தெரிவதாக ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

kgfchapter2-review
படத்தின் ஹீரோ யாஷ் ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், அவருக்கு இணையாக ஒவ்வொரு கேரக்டர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாகவே செய்து இருப்பதாகவும் கூறுகின்றனர். படத்தின் சண்டைக் காட்சிகளும், பின்னணி இசையும், விஷுவல் காட்சிகளும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

kgfchapter2-review
அந்தவகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் ஒரு பக்கா என்டர்டைன்மென்ட் திரைப்படமாக இருக்கிறது என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆகமொத்தம் இப்படம் முந்தைய பாகத்தை விட பல மடங்கு வசூலை வாரிக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

kgfchapter2-review
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
