Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் கேஜிஎஃப்- 2 படத்தின் டீசர் ரிலீஸ் தேதி உறுதி.. பெரட்டிவிடு, செதரவிடு!
ஒரு காலத்தில் கன்னட சினிமா உலகை கேலி செய்தவர்கள் எல்லாம் தற்போது கன்னட சினிமா உலகத்தை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். அதற்கு காரணம் சமீப காலமாக கன்னட சினிமாவின் வளர்ச்சிதான். புது புது கதைகள், அதிரடியான திரைக்கதைகள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த படம் என்றால் கே ஜி எஃப் தான். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியிருந்த கேஜிஎஃப் படத்தில் யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.
முதல் படமே இந்திய முழுவதும் வசூல் வேட்டையாடிய நிலையில் தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
முதல் பகுதியில் வெறும் கேரக்டர்களாக சொல்லப்பட்டவர்களுக்கு இரண்டாம் பாகத்தில்தான் அவர்களின் தில்லுமுல்லு வேலைகள் என்னென்ன என்பதை சொல்ல உள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல்.
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனராக கவனிக்கப்படும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்திருக்கும் கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் வருகிற ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாம்.
பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னதாக வெளி வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் சினிமா வாசிகள். கண்டிப்பாக கேஜிஎப் 2 படத்தின் டீசர் யூடியூப் தளத்தில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

kgf-chapter-2-cinemapettai
