fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வாந்தியை சுத்தம் செய்த கேஜிஎஃப் பட பிரபலம்.. இந்த அளவுக்கு யாரும் கஷ்டத்தை அனுபவிக்க கூடாது

kgf

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வாந்தியை சுத்தம் செய்த கேஜிஎஃப் பட பிரபலம்.. இந்த அளவுக்கு யாரும் கஷ்டத்தை அனுபவிக்க கூடாது

இந்தியா முழுவதையும் தற்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள படம் கே.ஜி.எஃப் 2. யஷ், சஞ்சய் தத், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி என பலர் நடித்துள்ள இந்த படம் வெளியான 7 நாட்களில் கிட்டத்தட்ட கிட்டத்தட்ட 700 வசூலை தாண்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இந்த படத்தில் பிரதமர் வேடத்தில் ரமிகா சென்னாக தோன்றி தன்னுடைய மிரட்டலான நடிப்பால் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளவர் பிரபல ஹிந்தி நடிகை ரவீணா டாண்டன்.

அறிமுகமில்லாதவர்களுக்காக, திரைப்பட இயக்குனர் ரவி டாண்டனின் மகளான ரவீனா 1991 “பட்தஹர் கே ஃபூல்” படத்தின் மூலம் மீண்டும் அறிமுகமானார். இப்போது தனது வெற்றிகரமான சினிமா பயணத்தை கொண்டாடினாலும், ரவீணா தன்னுடைய ஆரம்பகால போராட்டங்களை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். சமீபத்தில் இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

ரவீனா டாண்டன் விளம்பரத் திரைப்பட தயாரிப்பாளர் பிரஹலாத் கக்கரின் அலுவலகத்தில் பயிற்சியாளராக தனது பயணத்தை எவ்வாறு தொடங்கினார் என்பதைப் பற்றி பேசினார். “நான் ஸ்டுடியோ தளங்களின் தரையை துடைப்பது முதல் ஸ்டால்கள் தரைகளையும் சுத்தம் செய்துள்ளேன். சில சமயங்களில் அங்குள்ள வாந்திகளையும் சுத்தம் செய்துள்ளேன்.

நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது பிரஹலாத் கக்கருக்கு உதவி செய்தேன். அந்த நேரத்தில் சிலர் திரைக்குப் பின்னால் என்ன நீ செய்கிறாய், திரைக்கு முன்னால் இருக்க வேண்டிய ஆள் நீ, அதுதான் உனக்கு பொருந்தும் என கூறுவார்கள். ஆனால் அப்போது நான் ‘இல்லை, நான் நடிகையா ஒருபோதும் இல்லை’ எனக் கூறி வந்தேன். நான் இயல்பாகவே இந்தத் துறையில் இருக்கிறேன் நான் ஒரு நடிகையாக போகிறேன் என்று ஒரு போதும் நினைத்து வளர்ந்ததில்லை.

மேலும் பேசுகையில் ரவீணா, “ஒவ்வொரு முறையும் ஒரு மாடல் பிரஹலாத் செட்டில் வராதபோது, அவர் ‘ரவீணாவைக் கூப்பிடுங்கள்’ என்று சொல்வார், அவர் என்னை ஒப்பனை செய்து போஸ் கொடுக்கச் சொன்னார். அதை ஏன் மீண்டும் மீண்டும் பிரஹலாதனுக்கு இலவசமாகச் செய்ய வேண்டும், ஏன் கொஞ்சம் பாக்கெட் மணியைச் சேர்த்து செய்யக்கூடாது என்று நினைத்தேன். அதுதான் மாடலிங்கைத் தொடங்கியது. பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கின எனக்கு நடிப்புப் பயிற்சியோ, நடனப் பயிற்சியோ, டயலாக் டெலிவரி பயிற்சியோ இல்லை. நான் தானாக பயிற்சி பெற்று பரிணாமம் அடைந்தேன் படங்களில் நடித்து தான் அனைத்தையும் கற்றுக் கொண்டேன்.

பின்னர், ரவீனா டாண்டன் வெள்ளித்திரையில் தொடர் படங்களில் நடித்து தனது அசாத்தியமான நடிப்பால் பார்வையாளர்களின் இதயங்களை வென்றார். அவர் தனது ஒவ்வொரு படங்களிலும் தனது நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார் என்பதாலையே நீண்ட தூரம் வந்துள்ளார். ரவீனா டாண்டன் அடுத்ததாக “குட்சாடி” என்ற காதல் நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார். ரவீனாவுடன், சஞ்சய் தத், குஷாலி குமார் மற்றும் பார்த் சம்தான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

முதல் படத்திலேயே சிறந்த முக அழகு கொண்ட நடிகை என்னும் விருதை வென்றார். கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான டாமன் என்ற படத்தின் நடித்ததற்கு அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. மேலும் அதே ஆண்டில் நடித்த “ஃஸ்” என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் ஃபேர் அவார்ட்டும் கிடைத்தது. மேலும் பல விருதுகளை வாங்கியுள்ள இவர் அர்ஜுனுடன் சாது என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார். பின்னர் கமல்ஹாசனுடன் ஆளவந்தான் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் தோன்றியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top