Tamil Cinema News | சினிமா செய்திகள்
புற்றுநோயால் எலும்பும் தோலுமாக மாறிய சஞ்சய் தத்தின் சமீபத்திய புகைப்படம்.. கண்ணீர் விடும் ரசிகர்கள்
பாலிவுட்டின் பிரபல நடிகரான சஞ்சய் தத் தனது மிரட்டலான நடிப்பினால் சினிமாவில் உச்ச நடிகராக விளங்குபவர். 1981ஆம் ஆண்டு வெளியான ‘ராக்கி’ படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார் சஞ்சய் தத்.
அதன்பின் எக்கச்சக்கமான படங்களை நடித்துள்ளார், சமீபத்தில் இவர் நடிக்கவிருந்த KGF-2 படத்தில் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு ரிலீஸ் செய்த கொஞ்ச நாளிலேயே நுரையீரல் புற்று நோயால் அவதிப்பட்ட சஞ்சய் உடல் நிலை மோசமடைந்தது.
அதன் பின் சஞ்சய் தத், மூன்று மாதங்களுக்கு அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார். தற்போது குடும்பத்துடன் துபாயில் வசித்துவரும் சஞ்சய் தத், அவர்களோடு இருக்கும் குரூப் போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த புகைப்படத்தில் கம்பீரமாக இருக்கும் சஞ்சய் தத் ,எலும்பும் தோலுமாய் மெலிந்த உடலில் இருக்கும் அவருடைய சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விடுகின்றனர்.
இவருடைய உடல் நிலை மோசமடைந்து சென்று கொண்டிருப்பதால், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாக்க நினைத்த KGF-2 படத்தின் நிலை என்னவென்று தெரியாமல் படக்குழு திக்குமுக்காடி உள்ளனர். இதுமட்டுமல்லாமல் ரூ.735 கோடி மதிப்பிலான பல படங்களில் சஞ்சய்தத் ஒப்பந்தமாகி இருப்பதும் திரையுலகில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சஞ்சய் தத்தின் குடும்பத்தில் அவருடைய அம்மாவும், முதல் மனைவியும் புற்றுநோயால் உயிரிழந்த நிலையில் தற்போது சஞ்சய் தத்தும் புற்று நோயால் அவதிப்படுவதால் அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

sanjaydutt
தற்போது, ரசிகர்களும் சஞ்சய்தத் விரைவில் மீண்டு வந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கின்றனர்.
