கே ஜி எஃப் – 2 சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல சேனல்.. அட்ரா சக்க, தெறிக்க போகும் டிஆர்பி!

இந்திய சினிமாவில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பாகுபலி படத்தை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற படம் என்றால் அது கே.ஜி.எஃப் படம் மட்டும்தான். கன்னட மொழியில் வெளியான இப்படத்திற்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற வசனங்களும், ஆக்சன் காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். தற்போது இரண்டாம் பாகம் முழுவதுமாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. கடந்தாண்டே இப்படம் வெளியாக வேண்டியது. ஆனால் கொரானா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக இப்படத்தின் வெளியீடு தாமதமானது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கே.ஜி.எஃப் 2 படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்க பல முன்னணி சேனல்கள் போட்டி போட்டு வந்தன.

இந்நிலையில் இந்த போட்டியில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ நெட்வொர்க் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் கே.ஜி.எஃப் 2 படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கான அனைத்து சேட்டிலைட் உரிமையையும் இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்திற்கான சேட்டிலைட் உரிமையை கலர்ஸ் தமிழ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்திற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அந்நிறுவனம் இடம் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

kgf-2-cinemapettai-0
kgf-2-cinemapettai-0

ஏனென்றால் கேஜிஎஃப் படத்தின் முதல் பாகத்தை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஓயாமல் ஒளிபரப்பு செய்து ரசிகர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்று தான் கூற வேண்டும். தற்போது இரண்டாம் பாகத்தை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி கைப்பற்றாதது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் பரவலாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்