Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

விஜய் ஷங்கர் அல்லது ரிஷப் பண்ட் ? யாரை டீம்மில் சேர்க்கவேண்டும் . கோலிக்கு பிரீ அட்வைஸ் கொடுத்த கெவின் பீட்டர்சன். யோவ் இதெல்லாம் டூ மச் …

இந்தியா – இங்கிலாந்து மோதும் உலகக்கோப்பை போட்டி இன்று பிரிமிங்ஹாம்மில் நடைபெற உள்ளது.

உலகக்கோப்பை டீம்மில் அம்பத்தி ராயுடு அவர்களை ஓரம்கட்டிவிட்டு தேர்வானத்தில் இருந்தே விஜய் ஷங்கர் இணையத்தில் விவாதப்பொருள் ஆகிவிட்டார். ஹர்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா பௌலிங் ஆல்ரவுண்டர்; விஜய் ஷங்கர், கேதார் ஜாதவ் பேட்டிங் ஆல் ரௌண்டார் என்பது தான் இந்திய டீம்மின் கணிப்பு. எனினும் சமூகவலைத்தளங்களில் அடிக்கடி விஜய் ஷங்கர் அவர்களை ட்ரோல் செய்ய என ஒரு கூட்டமே உள்ளது.

தவான் காயம் காரணமாக வெளியேறிய பின் தான் ஷங்கருக்கு டீம்மில் வாய்ப்பு கிடைத்தது. மாற்று வீரராக பண்ட் சேர்க்கப்பட்டார், எனினும் இது வரை அவர் எந்த போட்டியிலும் ஆடவில்லை.

இந்நிலையில் இன்றைய போட்டியின் ஆடும் 11 பற்றியும் பல விவாதங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரரும், தற்பொழுது வர்ணனை செய்யும் கெவின் பீட்டர்சன் தன் ட்விட்டரில் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி அவர்களிடம் சொல்வது போல போட்ட பதிவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“அன்புள்ள கோலி, ரவி – தயவு செய்து விஜய் ஷங்கரை நீக்கி விடாதீர்கள். அவர் தன் இயல்பு நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறார். மேலும் நாளையை போட்டியை உங்களுக்கு வென்று கொடுப்பார். ரிஷப் பண்ட் பற்றி சிந்திக்காதீர்கள். அவர் உங்கள் உலகக்கோப்பை அணியில் இடம் பெறும் அளவுக்கு தயாராக இன்னும் மூன்று வார காலம் பிடிக்கும் . நன்றிகள் பாய்ஸ். ” என்பதே அது.

மேலோட்டமாக விஜய் ஷங்கர் பற்றி மட்டும் இந்த டீவீட்டில் பார்த்தால் ஓகேவாக தான் தோன்றும். எனினும் மறைமுகமாக பண்ட் தயாராக மூன்று வார காலம் என சொல்லியுள்ளார். அந்த சமயத்தில் உலகக்கோப்பை முடிந்து விடும். மேலும் தேங்க்ஸ் பாய்ஸ் என சொல்வது அதிரடி பேட்ஸ்மேன் பண்ட் இங்கிலாந்துக்கு எதிராக ஆடவைக்காமல், ஷங்கர் அவர்களை ஆட வைப்பதால், டீம் வெற்றி பெறுவது சுலபம் என்ற பொருளில் தான் பதிவிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top