300 பருத்திவீரர்கள் ஸ்டைலில் உருவாகியுள்ள அக்ஷய் குமாரின் “கேசரி” பட திரைவிமர்சனம்.

இப்படம் சகாரிக்காவில் 1987 இல் நடந்த யுத்தத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷின் ராணுவ பிரிவை சேர்ந்த 21 சீக்கிய வீரர்கள் , 10000 ஆப்கான் ( அப்ரிடி, ஒசாகாசி) மலை வாழ் பழங்குடியின மக்களை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்த வரலாற்றையே படம் எடுத்துள்ளனர்.

கதை

ஹவில்தார் இஷார் சிங் ரோலில் அக்ஷய் நடித்துள்ளார். தன்மானத்தையும் தன வீரத்திற்கும் முக்கிய தூவும் கொடுக்கும் ரோல் இவருடையது. அபலை முஸல்மான் பெண்ணை காக்க முற்பட்டு பதான் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார். மேலும் பிரிட்டிஷ் கமாண்டரும் கடுப்பாகி இவரை சகாரிக்காவில் கோட்டைக்கு மாற்றுகிறார். அந்த இடத்தின் வாயிலாகவே லோகார்ட் மற்றும் குலிஸ்தான் இடத்திற்கு தகவல் பறி மாற்றம் நடக்கும்.

இவ்வாறு அங்கு சென்ற தலைமையேற்கிறார் ஹீரோ. எனினும் பெரிதாக போர் சூழல், அபாயம் இல்லாத காரணத்தால் அங்கு இருக்கும் 20 சீக்கிய வீரர்கள் அந்தளவுக்கு ஆயுத்தமாகவும், தயாராகவும் இல்லை. இந்நிலையில் அங்கு சென்ற உடன் எதிர்ப்பை சம்பாதித்தாலும், பின்னர் அனைவரின் ஆதரவையும் பெறுகிறார் ஹீரோ. கோட்டையை சுற்றிலும் எதிர்கால சூழ முடிகிறது முதல் பாதி.

Kesari

இரண்டாம் பாதி முழுவது இவர்களுக்குள் நடக்கும் யுத்தம் அதனை சார்த்த நிகழ்வுகளை தான் மிக எமோஷனலாக நாம் பார்ப்போம். தங்கள் பெருமிதத்திற்கு என்று மட்டும் அல்லாமல், மீதி இரண்டு கோட்டையில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு வேறு படையின் உதவி கிடைக்கும் வரை தாங்களே எதிரிகளை சமாளிக்க வேண்டும் என இவர்களின் நோக்கமும் உயிர் தாக்கமும் உன்னதமானது.

பிளஸ்

அக்ஷய் குமார், எமோஷனல் பகுதிகள், திரைக்கதை

மைனஸ்

பின்னணி இசை, நாட்டுப்பற்று என்பதனை தாண்டி சீக்கியர்களின் பெருமையை பறை சாற்றுகிறதோ

 

சினிமாபேட்டை அலசல்

கமெர்ஷியல் ஆக இருக்கட்டும் அல்லது டாகுமெண்ட்ரி ஸ்டைல் எதுவாக இருப்பினும் அசுரத்தனமான நடிப்பால் நம்மை திக்கு முக்காட செய்கிறார் அக்ஷய் குமார். சில இடங்களில் புனைவு தான் என்றாலும் கனகச்சிதமாக அது பொருந்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

சினிமாபேட்டை வெர்டிக்ட்

நம்மிடுமே சொல்லுவதற்கு பல அற்புத வரலாறு உள்ளது என்பதற்கு இப்படமும் ஒரு உதாரணமே. நம் இந்தியரின் பெருமையை, வீரத்தை உலகளவிற்கு இப்படம் எடுத்து சென்றுள்ளது என்பதில் துளியும் ஐயமில்லை.

சினிமாபேட்டை ரேட்டிங்  3.75 / 5

Leave a Comment