விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவரின் தெறி படம் கேரளாவில் மட்டும் ரூ 16.5 கோடி வசூல் செய்தது.

அந்த அளவிற்கு மாஸ் ரசிகர்கள் வைத்திருக்கிறார் விஜய். ஓணம் பண்டிகையை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் ஜில்லா ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்துள்ளனர்.

இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி அதற்குள் விற்றுவிட்டதாம். மேலும் பல இடங்களில் அங்கு விஜய் படங்கள் ஸ்பெஷல் ஷோவாக திரையிடப்படவுள்ளதாம்.