ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம்(படம் உள்ளே)

kerela-ajith-fansகேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் உள்ள அஜித் ரசிகர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதியோர் இல்லம் மற்றும் அனாதை குழந்தைகள் உள்ள இல்லங்களில் அன்னதானம் செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று கேரளாவில் உள்ள பல பகுதிகளில் ‘தல 57’ என்ற பூக்கோலம் போட்டு வருகின்றனர். அழகழகான வண்ணங்களில் அமைக்கபட்டுள்ள இந்த பூக்கோலங்களின் படங்கள் டுவிட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த பதிவுகளுக்கு ஏராளமான லைக்குகள் கிடைத்து வருகின்றன.

அஜித்துக்கு தமிழகத்தை போலவே கேரளாவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளதை இந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன.\

Comments

comments

More Cinema News: