Vijay_Fans_Crowd

மலையாளத்தில் இளைய தளபதிக்கு வெறிபிடித்த பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அங்கு ரிலீஸ் ஆகும் அனைத்து தளபதி படங்களும் வசூல் மழையை பொழியும்.

மெர்சல் படம் கூட முதன் முறையாக கேரளாவில் அதிக ரைட்ஸ்க்கு விநியோகிக்கப்பட்டு சாதனை படைத்தது. மலையாளத்தில் நடிக்கும் பல ஹீரோக்களும் தாங்கள் தீவிர தளபதி ரசிகர்கள் என்று பல பேட்டிகளில் சொல்லி இருகின்றனர்.

mersal business
2016ல் வெளிவந்த ப்ரித்திவிராஜ் நடித்த பாவடா என்னும் மலையாளப்படத்தில் ப்ரித்திவிராஜ் விஜய் ரசிகனாக நடித்திருப்பார். இதனை தொடர்ந்து தற்போது போக்கிரி சைமன் என்னும் திரைப்படம் September 15ம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தில் நடித்திருக்கும் அனைவருமே படுதீவிர விஜய் ரசிகர்கள். படத்தின் பெயரே தளபதியின் போக்கிரி படத்தை தழுவி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோ Sunny Wayne தளபதியின் ரசிகராக போக்கிரி சைமன் என்னும் கதாபதிரத்தில் நடிக்கிறார்.

அதிகம் படித்தவை:  தெறி,கபாலி படங்களுக்கு சிக்கல்


இந்த படத்தில் விஜயை புகழ்ந்து ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. அந்த பாடலில் விஜய் நடித்த படங்களின் பெயர்களை ஒவ்வொன்றாக வரும்படி பாடுகின்றனர். தமிழ் ரசிகர்களையே பின்னுக்கு தள்ளும் விதமாக தளபதியின் மலையாள ரசிகர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  தொலைக்காட்ச்சி வரலாற்றிலேயே மெர்சல் இசை வெளியிட்டு விழாவிற்கு இதை செய்த பிரபல தொலைக்காட்சி.

இதோ அந்த பாடலின் வீடியோ உங்களுக்காக

ஆகஸ்ட் 26ல் வெளியான இந்த வீடியோவை இதுவரை ஐந்தரை லட்சம் பேர்கள் பார்த்துள்ளனர்!

இளைய தளபதி மீதான எங்கள் அன்பினை வெளிக்காட்ட இந்த படம் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளதாக படக்குழுவினர் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: தளபதினாலே தமிழ் நாட்லேந்து தாய்லாந்து வரைக்கும் மாஸ்தான்.