fbpx
Connect with us

Cinemapettai

இந்த ரசிகர்களை பெற விஜய் தவம் செய்திருக்க வேண்டும்.. தளபதியை புகழ்ந்து தள்ளிய கேரளா எம்எல்ஏ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த ரசிகர்களை பெற விஜய் தவம் செய்திருக்க வேண்டும்.. தளபதியை புகழ்ந்து தள்ளிய கேரளா எம்எல்ஏ

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருப்பவர் தளபதி விஜய். பல வெற்றி, தோல்விகளை கடந்து தற்போது 200 கோடிகளை வசூல் செய்யும் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். சினிமா பின்புலம் உள்ள பலரும் தமிழ் சினிமாவில் நிலைக்கவில்லை என்பது உண்மையே.

அதை முறியடித்து மக்கள் மனதில் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். மேலும் பல இளைஞர்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்யும் சாதனமாக மாற்றியுள்ளார்.

இதை சிலர் அரசியல் ஆசையில் தான் செய்கிறார் என்று சொன்னாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தளபதி ரசிகர்கள் தொடர்ந்து இத்தகைய நல்ல விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு ரசிகர்கள் மட்டுமின்றி கேரளாவிலும் விஜய் மக்கள் இயக்கம் பெரிய அளவில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறது.

அதை பல செய்தி வாயிலாக நாம் கேட்டிருந்தோம். தற்போது கேரளா தளபதி ரசிகர்கள் செய்யும் நற்காரியங்களில் பாராட்டி தளபதி விஜய்யை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் கேரள எம்எல்ஏ ஜார்ஜ்.
ஜார்ஜ் கூறியதாவது, அரசியலுக்கு வந்த பிறகு சினிமா படங்களை அதிகம் பார்க்காத நான், தளபதி விஜய்யின் ஓரிரு படங்களை தொலைக்காட்சி வாயிலாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்பொழுது அவருக்கு பெரிய ரசிகன் ஆகிவிட்டேன். மேலும் கேரளாவில் ஒரு தமிழ் நடிகருக்கு பாலபிஷேகம் செய்யும் அளவுக்கு ரசிகர்கள் உருவாகியுள்ளனர் என்றால் அந்த வளர்ச்சியை சொல்லி மாளாது. மேலும் விஜய் ரசிகர்கள் படங்களை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் சமூக அக்கறைகளை அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள்.

இது என்னை மிகவும் கவர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக இத்தகைய ரசிகர்களை பெற விஜய் தவம் செய்திருக்க வேண்டும் எனவும் பெருமைப் படுத்தி உள்ளார்.
இதனை அறிந்த தளபதி ரசிகர்கள் தற்போது இந்த செய்தியை கேட்டு கொண்டாடி வருகின்றனர்.

தளபதி ரசிகர்களால் தளபதிக்கு ஏற்பட்ட பெருமை எனவும் சிலாகித்து கொள்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top