Connect with us

Cinemapettai

தண்ணீருக்காக தவிக்கும் தமிழகம்.. தானாக உதவ முன்வந்த கேரளா.. ஆனால் தமிழக அரசு செய்ததை பாருங்கள்

pinarayi-vijayan

Tamil Nadu | தமிழ் நாடு

தண்ணீருக்காக தவிக்கும் தமிழகம்.. தானாக உதவ முன்வந்த கேரளா.. ஆனால் தமிழக அரசு செய்ததை பாருங்கள்

தண்ணீர் இல்லாமல் தவிக்கும் தமிழகத்திற்கு உதவ முன்வந்துள்ளார் கேரள அரசு முதல்வர் பினராய் விஜயன், ஆனால் நிராகரித்த தமிழக அரசு என்ன காரணமாக இருக்கும்.

கேரளாவில் கடந்த ஆண்டு மிகப்பெரிய வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது கேரள மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து பால் பொருட்கள், குடிநீர், நாப்கின், அரிசி, மருந்துகள் என அனைத்து விதமான பொருள்களையும் அனுப்பி கேரள மக்களுக்கு உதவி செய்தனர். தற்போது அந்த நன்றியை மறக்காமல் கேரள அரசு தமிழகத்திற்கு உதவ முன்வந்துள்ளது.

தண்ணீர் இல்லாமல் தவிக்கும் தமிழகத்திற்கு கேரள அரசு 20 லட்சம் லிட்டர் குடிநீரை அனுப்ப உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வரும் ரயிலில் மூலம் குடிநீரை அனுப்ப உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால் கேரள அரசின் இந்த உதவியை தமிழ்நாடு அரசு நிராகரித்துள்ளது.

மேலும் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளது தமிழக அரசால் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க முடியும் எனவும் அதனால் தற்போது உங்கள் உதவி தமிழகத்திற்கு தேவையில்லை எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top