India | இந்தியா
பெற்ற குழந்தையை புத்தகப் பைக்குள் வைத்து செய்த கொடூரம்.. தாயின் கேவலமான செயல்
கேரள மாநிலத்தில் பிறந்த குழந்தையை கொன்று சடலத்தை தன்னுடைய புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து விசாரிக்கையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்து போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள கட்டப்பனை அரசு கல்லூரியில் படித்து வருகிறார் அந்த 20 வயது இளம் பெண். இவர் சமீபகாலமாக ஒருவரை தீவிரமாக காதலித்து வந்ததன் விளைவு, மோகமாக மாறி கருவாக உருவெடுத்தது.
இதனை தன் காதலனிடம் கூற அந்த இளைஞர் பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். செய்வதறியாது தவித்த அந்த இளம்பெண் கல்லூரி விடுதியிலேயே சிறிது காலமாக தங்கி வந்துள்ளார். பின் குறை பிரசவத்தில் ஆறு மாதத்திலேயே அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.
இந்த குழந்தையை கொன்று தனது புத்தகப் பையில் வைத்துக்கொண்டு சுற்றி உள்ளார். தனது தோழியிடம் உதவி கேட்க, அவர் பதறிக்கொண்டு போலீசாரிடம் தெரிவித்தார். இந்த வழக்கினை விசாரித்த போலீசார், தாயே தன் குழந்தைக்கு பால் கொடுத்து கழுத்தை நெரித்து கொன்ற கொடுமை கேட்டு அதிர்ச்சி அடைந்தது. பின் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களேமா..
