Tamil Cinema News | சினிமா செய்திகள்
கேரளா வெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா.! அவரின் உருக்கமான வீடியோ பதிவு இதோ
கடந்த ஆகஸ்ட் 8 ம தேதியில் இருந்து கேரளாவில் தொடர் காண மழையால், கேரளாவே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது மேலும் 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி ஆணை முழு கொள்ளவையும் எட்டி இடுக்கி ஆணை திறக்கப்பட்டுள்ளதால் அங்கு வெள்ளத்தாலும் நிலா சரிவாலும் 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள்.
பல மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள், இதனால் மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், பிரபலங்கள் அனைவரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி உதவி செய்து வருகிறார்கள், இந்த நிலையில் கேரளா வெள்ளத்தில் நடிகை அனன்யா வீடும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதை பற்றி அவர் ஒரு வீடியோ பதிவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது கடந்த வெள்ளிகிழமை வரை எங்கள் வீட்டில் வெள்ளம் வராமல் பாதுகாப்பாக இருந்தோம் ஆனால் கடந்த 2 நாட்களாக வீட்டிற்க்குள் நீர் புகுந்து அவதி பட்டோம், எங்கள் உறவினர் வீட்டில் நீர் புகுந்துவிட்டது தற்பொழுது எனது தோழி வீட்டில் பத்திரமாக இருக்கிறோம் இந்த நேரத்தில் எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி என வீடியோவில் கூறியுள்ளார்.
