கேரளாவில் ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக கேரளாவில் உள்ள 39 அணைகளில் 35 அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அபாயகரமான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது இதனால் கேரளாவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

அதனால் மக்கள் வீடு, உணவு,உடை இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள் இவர்களுக்கு பல பிரபலங்கள் முதல் மக்கள் வரை அனைவரும் நிதி உதவி செய்துவருகிறார்கள், மேலும் டெலிகாம் நிறுவனமான வோடபோன், ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல், ஐடியா ஆகிய நிறுவனங்கள் இலவச சேவையை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு இன்று மாலை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எர்ணாகுளத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு புறப்படும் என்றும் பயணிகள் சிறப்பு ரயில், ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம், நெல்லை, மதுரை, திருச்சி வழியாக சென்னையை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.