fbpx
Connect with us

கேரள பெரிய ஹீரோக்களின் கதையை முடித்த தளபதி விஜய்..! மெர்சல் மாபெரும் சாதனை..!

News / செய்திகள்

கேரள பெரிய ஹீரோக்களின் கதையை முடித்த தளபதி விஜய்..! மெர்சல் மாபெரும் சாதனை..!

தமிழகத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மெர்சல்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது.

mersal nithya menon

தமிழகத்தில் இப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியதால், முதல் நாள் அனைத்து திரையரங்குகளிலும் பெரும் கூட்டம் இருந்தது. பல்வேறு இடங்களில் அதிகாலையிலேயே காட்சிகள் தொடங்கப்பட்டன.

சென்னை சத்யம் திரையரங்கில் ஸ்டூடியோ 5 திரையரங்கம் தவிர, அனைத்திலும் ‘மெர்சல்’ திரையிடப்பட்டுள்ளது. இது அத்திரையரங்கின் வரலாற்றில் ஒரு சாதனையாகும். ஐநாக்ஸ், பிவிஆர் ஆகிய திரையரங்குகள் வேலைநிறுத்தத்தத்தில் இருந்தாலும், ‘மெர்சல்’ சென்னையில் முதல் நாளில் 1.5 கோடி வசூல் செய்து சாதனை புரிந்திருக்கிறது.

mersal

தமிழகத்தில் மதுரையில் முதல் நாளில் ‘மெர்சல்’ சுமார் 3 கோடி அளவுக்கு வசூல் செய்து விநியோகஸ்தர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 20 கோடி அளவுக்கு ‘மெர்சல்’ படத்தின் முதல் நாள் தமிழக வசூல் இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள்.

மேலும், தமிழகத்தின் முதல் வார வசூல் சுமார் 70 கோடி வரை தொட வாய்ப்பிருப்பதாகவும், 2-வது வாரம் தான் இப்படத்தின் நிஜ நிலவரம் என்ன என்பது தெரியவரும் என்றும் விநியோகஸ்தர்கள் குறிப்பிட்டார்கள். அதிக பொருட்செலவில் தயாரித்திருப்பதால் சுமார் 3 வாரங்களுக்காவது நல்ல கூட்டமிருந்தால் மட்டுமே, தயாரிப்பாளர் லாபமடைய முடியும் என்றும் தெரிவித்தார்கள்.

mersal movie review

mersal vijay

தமிழகம் மட்டுமன்றி கேரளா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களிலும் ‘மெர்சல்’ வசூல் சாதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் கூட்டம் நிறைய இருக்கிறது. இங்கு அவரின் படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும். இந்நிலையில் தற்போது மெர்சல் படம் இங்கும் வசூல் சாதனையை செய்துவருகிறது.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான மோகன் லால் நடித்த புலிமுருகன், மம்முட்டி நடித்த தி கிரேட் ஃபாதர் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையையும் மெர்சல் முறியடித்துள்ளது.

மெர்சல் ( 6.11 cr)
தி கிரேட் ஃபாதர் ( 4.31 cr)
புலிமுருகன் ( 4.08 cr)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top