News | செய்திகள்
அய்யய்யோ.. பாம்பு சட்ட வேட்டு வெச்சுடுமோ? அச்சத்தில் கீர்த்தி சுரேஷ்.!
வேகமாக டாப் லெவலுக்கு போகும் எல்லா ஹீரோயின்களுக்கும் வரும் பிரச்னைதான் இது. ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்கிறதே என்று சின்ன ஹீரோக்களுக்கு ஜோடியாகி விடுவார்கள். ஆனால் அந்த படம் இழு இழுவென இழுக்கப்பட்டு உயரத்துக்கு போனதும் ரிலீஸுக்கு வந்து கேரியருக்கே உலை வைக்கும். அப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார் கீர்த்தி சுரேஷ் .
இவர் நடித்த படமான பாம்பு சட்டை படம் இப்போதுதான் வரவிருக்கிறது. கேரியரின் தொடக்கம் என்பதால் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இப்போது விஜய், சூர்யா என்று டாப் லெவல் ஹீரோக்களுக்கு ஜோடி போடும் நேரத்தில் ரிலீஸுக்கு வருவதால் அதை எப்படியாவது தடுக்க முடியுமா? என்று தாய்க்குலம் முயன்றிருக்கிறது.
ஆனால் படத்தின் தயாரிப்பாளரான காமெடி நடிகர் நடிகர் சங்கத்துக்கு நெருக்கம் என்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறாராம்.
