ரொம்ப குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகிவிட்டவர் கீர்த்தி சுரேஷ். இப்போது டாப் ஹீரோக்களுடன் நடித்துவருகிறார்.

அவ்வப்போது நகைக்கடை, ஜவுளிக்கடைகளையும் திறந்து வைத்து சேவை செய்து வருகிறார். நேற்று சேலத்தில் ஒரு நகைக்கடையில் அமைக்கப்பட்ட ஒரு புதிய ஷோரூம் திறப்பு விழாவிற்கு சேலம் வந்தார். அவரைப் பார்க்க முண்டியடித்து தடியடி வாங்கிய தமிழர் கூட்டம் பற்றி ஏற்கெனவே படித்திருப்பீர்கள்.

நகைக்கடை திறப்பு விழா முடிந்ததும், கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “சேலத்திற்கு முதல் முறையாக வந்துள்ளேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

சேலம் ரசிகர்கள் என்மீது வைத்துள்ள அன்புக்கும், ஆதரவிற்கும் எனது மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பார்க்க, வாழ்த்த வந்த ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘பைரவா’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தேன். அவருடன் நடித்த அனுபவத்தை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. சூர்யாவுடன் சேர்ந்து நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. விஷாலுடன் ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிக்கிறேன். அடுத்து அஜித்துடன் நடிப்பேன் என்று நம்புகிறேன்,” என்றார்,