வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

15 வருட நண்பனை திருமணம் செய்யும் கீர்த்தி சுரேஷ்.. மாப்பிள்ளையின் புகைப்படம் வைரல்

கீர்த்தி சுரேஷுக்கு அடுத்தமாதம் கல்யாணம் நடக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில், தன் திருமணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அப்பா பூச்சக்கொரு மூக்குத்தி, அறம் தம்புறானுக்கு போன்ற பல படங்களை தயாரித்திருக்கிறார். சில படங்களில் நடித்திருக்கிறார். அவரது அம்மா மேனகா சுரேஷ் நாகர்கோயிலைச் சேர்ந்தவர், குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்தவர் ஆவார்.

இப்படி சினிமா பாரம்பரியம் கொண்ட குடும்பத்தின் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ், 2000 ஆம் ஆண்டு பைலட்ஸ் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மாலிவுட்டில் சில படங்களில் நடித்த வருக்கு, 2015 ஆண்டு எல்.விஜய்யின் இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் கிடைத்தது.

அதன்பின், விஜயின் பைரவா, ரஜினி முருகன், மகா நதி, சர்க்கார், அண்ணாத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். சாவித்ரியின் பயோபிக் படமான மகாநதி படத்தில் ஹீரோயினாக நடித்த அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

தமிழ், தெலுங்கை தொடர்ந்து தற்போது அட்லீ தயாரிப்பில், பேபி ஜான் படத்தின் மூலம் இந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில், கீர்த்தி சுரேஷின் காதலர் பற்றியும், அவரது திருமணம் குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.

15 வருட நண்பரை மணக்கும் கீர்த்தி சுரேஷ்!

ஆனால், அதையெல்லாம் கீர்த்தி சுரேஷ் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெறும் என இணையதளத்தில் தகவல் பரவியது.

அப்போதுதான் மாப்பிள்ளை, கீர்த்தி சுரேஷுன் 15 ஆண்டு கால நணபர் எனவும், அவர் பெயர் ஆண்டனி தட்டில், கேரளாவைச் சேர்ந்தவர். துபாயிலும், சென்னையி கம்பெனி வைத்துள்ள தொழிலபதிபர், 100 கோடிக்கு சொத்து மதிப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

முதலில் இருவரும் நணர்களாக இருந்து பின் காதலர்களாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இத்தனை வதந்திகள் வந்த பிறகும் பதிலளிக்காமல் இருந்த கீர்த்தி சுரேஷ், ஆண்டனி உடனான காதலை இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி,தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் காதலருடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, 15 ஆண்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் வைரலகி வருகிறது.இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Keerthy suresh - Antony Thattil
Keerthy suresh – Antony Thattil
- Advertisement -

Trending News