சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாகவும், அவர்களில் ஒருவரான ஸ்ரேயா சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  இந்தியாவை வம்புக்கு இழுக்கும் டொனால்ட் ட்ரம்ப்

இந்த படத்தின் மற்ற இரண்டு நாயகிகள் யார் என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளியானது. நயன்தாரா, ஹன்சிகா உள்பட பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கீர்த்திசுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  PPK சூப்பர் ஹிட் ! தயாரிப்பாளர் யுவன் இயக்குனர் இலனுக்கு கொடுத்த ஸ்பெஷல் பரிசு என்ன தெரியுமா ?

‘ரஜினிமுருகன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது ‘விஜய் 60’ மற்றும் ‘ரெமோ’ படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.