விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ‘ரஜினிமுருகன்’ பெற்ற வெற்றியால், தற்போது அவர் விஜய்யின் 60வது படம், சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’, தனுஷின் ‘தொடரி’ ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகளின் வரிசையில் உள்ளார்.

அதிகம் படித்தவை:  முதல் திருமணத்தை மறைத்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையான மரணம்!

இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் ‘நான் ஈ’ நாயகன் நானிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘நேனு லோக்கல்’ என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷூக்கு முக்கியத்துவமான வேடம் என்றும், இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகல் குவிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  முகமூடி பட நாயகியுடன் குத்தாட்டம் போடும் ராம் சரண் ! "ஜிகேளு ராணி" சாங் ப்ரோமோ வீடியோ !

மேலும் ‘தொடரி’ மற்றும் ‘ரெமோ’ அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் கோலிவுட்டிலும் விரைவில் கீர்த்திசுரேஷ் நம்பர் ஒன் இடத்தை பிடித்துவிடுவார் என்று கூறப்படுகிறது.