Tamil Cinema News | சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷ் கிட்ட மனுசன் போவானா.. ஆள விடுங்கடா சாமி என தெறித்து ஓடும் சினிமாகாரர்கள்
ஏண்டா உடல் எடையை குறைத்தோம் என ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கதை கூற எந்த இயக்குனர்களும் அவர் பக்கம் செல்லாமல் இருப்பது அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக பாலிவுட் சினிமாவை நம்பி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் வந்த கதைகள் எல்லாம் உதறித் தள்ளினார் கீர்த்தி சுரேஷ். அதன் விளைவே தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் உங்களுக்கு இந்த கதை பொருத்தமாக இருக்காது என திருப்பி அனுப்பிவிட்டார்கள். இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அடுத்ததாக மிஸ் இண்டியா எனும் படத்தில் நடித்து வந்தார்.
அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பென்குயின் என்ற படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.
அதுமட்டுமில்லாமல் கதை சொல்ல வரும் இயக்குனர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு பைத்தியம் பிடிக்க வைத்து விடுகிறாராம். ஒரே ஒரு மகா நதி எனும் படத்தை நடித்து விட்டு இவர் செய்யும் அலப்பறை தாங்க வில்லை என்கிறது இயக்குனர் சங்கம்.
நல்ல அழுத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதன் விளைவுதான் முன்னணி நடிகர்களின் அனைத்து படவாய்ப்புகளும் கையைவிட்டு போனதன் காரணம்.
இதெல்லாம் 35 வயதுக்கு மேல் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டிய கதாபாத்திரங்கள் என கோலிவுட் வட்டாரங்களில் கீர்த்தி சுரேஷுக்கு அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.
