Tamil Cinema News | சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாகும் செல்வராகவன்! வைரலாகுது பட தலைப்பு, மாஸ் பர்ஸ்ட் லுக்
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தில். நடிகராக அவதாரம் எடுக்கிறார் செல்வராகவன் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது.
கோலிவுட் வட்டாரத்தில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் செல்வராகவன். இதுவரை தனது படத்தில் கூட ஒரு காட்சியில் தோன்றியது கிடையாது. ஆனால் இவர் நடிகராக நடிப்பதனை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மகாநடிகை படத்திற்கு பின் வேற லெவல் சென்று விட்டார் கீர்த்தி சுரேஷ். தென்னிந்திய சினிமா என்ற எல்லையை கடந்து இந்திய அளவு ரீச் ஆகிவிட்டார். நேற்று இவரது “குட் லக் சகி” பட ட்ரைலர் வெளியாகி நல்ல ரீச் ஆனது. ஸ்போர்ட்ஸ் ஜானர் படம் அது.
சாணிக் காயிதம் – இப்படத்தை ஸ்க்ரீன்சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். வசந்த் ரவியின் இரண்டாவது படமான “ராக்கி” படத்தை இயக்கியுள்ள அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.
கையில் கத்தியுடன் செல்வராகவன், துப்பாக்கியுடன் கீர்த்தி சுரேஷ் நிற்பது போன்றும் இவர்கள் முன் ரத்த கரையுடன் வேன் ஒன்றும், சில நபர்களும் நிற்கிறார்கள். கீர்த்தி புடவையில் சொருகியுள்ள அரிவாள் என மாஸாக உள்ளது போஸ்டர்.

saani kaayidham
ஒளிப்பதிவை யாமினி, ராமு தங்கராஜ் ஆர்ட் பணிகளை கவனிக்கிறார்கள். தற்போது வெளியாகியுள்ள படத்தின் போஸ்டர் இப்படம் தரமான ஆக்ஷன் படம் என்பதனை நமக்கு புரிய வைக்கிறது.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
