Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தங்கச்சியாக நடிக்க 3 கோடி ஜாஸ்தி.. கீர்த்தியை தூக்கிவிட்டு சாய் பல்லவிவை களத்தில் இறக்கும் படக்குழு

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வேதாளம். இப்படத்தில் அஜித்திற்கு தங்கையாக லட்சுமிமேனனும், நாயகியாக ஸ்ருதிஹாசனும் நடித்து இருந்தனர். இவர்கள் தவிர கோவை சரளா, சூரி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். தெரிந்து ரீமேக்கில் அஜீத் கதாபாத்திரத்தின் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது 150வது படத்தில் சிரஞ்சீவி நடித்திருந்தார். அப்படம் தமிழில் வெளியான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். அதனை தொடர்ந்து சைரா நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா என இரு நேரடி தெலுங்குப் படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று அவரது 153வது படம் தொடங்கியது . இது மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் ரீமேக்காகும். இப்படத்தை மோகன்ராஜா இயக்குகிறார். இப்படத்தை முடித்த பின்னர் வேதாளம் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் முதலில் நடிகர் பவன் கல்யாண் தான் நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது அரசியல் மற்றும் பிற பணிகளில் அவர் பிசியாக இருப்பதால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்தே நடிகர் சிரஞ்சீவி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

saipallavi-pawankalyan-cinemapettai

saipallavi-pawankalyan-cinemapettai

இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்க உள்ளார். வேதாளம் படத்தில் நாயகியை விட தங்கை கதாபாத்திரமே முக்கியமானது. எனவே இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷை முதலில் கேட்டிருந்தனர். ஆனால் அவர் 3 கோடி சம்பளம் கேட்டதால், தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் . அனேகமாக சாய்பல்லவி நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

Continue Reading
To Top