Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த படத்தால் நான் ரொம்ப நொந்து விட்டேன் – கீர்த்தி சுரேஷ் புலம்பல்
தான் நடித்த ஒரு படத்தில் கடும் நொந்து விட்டதாக கோலிவுட்டின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தின் பழம்பெரும் நடிகர்களின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து இருக்கிறது.
முதலில், கீர்த்தி சுரேஷிற்கு எதிராக ட்ரோகளும், மீம்களும் சமூக வலைத்தளங்களில் அதிகமாகவே காணப்படும். இதனால், நடிகையர் திலகம் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானதும், சாவித்ரியை இவரால் திரையில் கொண்டு வர முடியுமா என பலருக்கும் சந்தேகமே நிலவியது. ஏன்? பழம்பெரும் நடிகையரே கீர்த்தி இப்படத்திற்கு தகுதியானவர் இல்லை என ஓபன் ஸ்டேட்மெண்ட்டே கொடுத்தனர்.
அத்தனை விமர்சனங்களும் படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டதும் தவிடு பொடியானது. இதனை தொடர்ந்து, படத்தின் வெளியீட்டு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கீர்த்தி, தனது திரையுலக பயணம் குறித்து மனம் திறந்தார்.
அப்போது பேசிய அவர், கேரியரின் முதல் படியிலேயே இப்படத்தை ஒப்புக்கொள்ள சற்று தயங்கினேன். ஆனால், நாக் அஸ்வின் எனது தொடரி படத்தை பார்த்து விட்டே இந்த படத்தால் நான் தான் நடிக்க வேண்டும் என முடிவு செய்ததாக கூறினார். எனக்கு அது பெரிய சந்தோஷத்தை கொடுத்தது.
காரணம், தொடரி படத்தில் எனக்கு சில பாராட்டுகள் வந்தாலும், நிறைய பேர் என்னை விமர்சித்தே பேசினர். சமூக வலைத்தளங்களிலும் மீம்ஸ்களும் அதிகரித்தது. ஆனால், தற்போது அந்த படம் தான் தமிழில் நடிகையர் திலகம் படத்தையும், தெலுங்கில் மகாநடி படத்தையும் கொடுத்து இருக்கிறது. முதல் முறையாக இப்படத்தின் கதையை தான் 3 மணிநேரம் கேட்டேன். அதுவே எனக்கு ஒரு நம்பிக்கையை தந்ததாக தெரிவித்து இருக்கிறார்.
