Tamil Cinema News | சினிமா செய்திகள்
வாரிசு நடிகருக்கு ஜோடியாக நடிக்க ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய கீர்த்தி
தமிழில் கீர்த்தி சுரேஷ் வசம் சூர்யா, கார்த்தி படங்கள் உள்ளன. அவர் தற்போது தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் தெலுங்கில் சீனியர் ஹீரோக்கள் என்றாலும் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொள்கிறார்.
தெலுங்கில் அவருது மார்க்கெட் பிக்கப் ஆகியுள்ளது.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீனிவாஸ் ஸ்ரீவாஸ் இயக்கத்தில் நடிக்கும் புதிய படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.
ஸ்ரீனிவாஸ் ஜோடியாக நடிக்க கீர்த்திக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சம்பளம் கொடுத்துள்ளாராம் தயாரிப்பாளர் சுரேஷ். கீர்த்தியை தனது மகனுக்கு ஜோடியாக்கி பார்க்க விரும்பியதே சுரேஷ் தானாம்.
கீர்த்தி, ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் துவங்குகிறது. தனது மகனுக்கு பெரிய பெரிய நடிகைகளை ஜோடியாக்குவதில் குறியாக உள்ளார் சுரேஷ்.
ஸ்ரீனிவாஸின் முதல் படமான அல்லுடு சீனுவில் அவருக்கு ஜோடியாக சமந்தாவை ஒப்பந்தம் செய்தார் சுரேஷ். அதே படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். ஸ்ரீனிவாஸ் தற்போது நடித்து வரும் படத்தின் ஹீரோயின் ராகுல் ப்ரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
