Tamil Cinema News | சினிமா செய்திகள்
2018 ஆம் ஆண்டு கலக்கிய கீர்த்தி சுரேஷ்.. 2019-ல் சறுக்கியது ஏன்?
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து வெளியான திரைப்படம் ரஜினி முருகன். இந்த படத்திற்கு பிறகு தான் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே கிடைத்தது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ் கிடுகிடுவென முன்னணி நாயகியாக உயர்ந்தார்.
தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் ஆகிய சினிமாக்களிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். சினிமாவில் இவரது மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. 2018 ஆம் ஆண்டு மட்டும் தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷுக்கு 5 படங்கள் வெளிவந்துள்ளன.
தானா சேர்ந்த கூட்டம், சண்டக்கோழி 2, சர்க்கார், சீமராஜா, சாமி ஸ்கொயர் போன்ற படங்கள் வெளிவந்தன. ஆனால் இதில் சர்கார் தவிர்த்து மற்ற திரைப்படங்கள் பெரிய அடி வாங்கியது. சர்கார் படமும் அரசியல் கருத்துக்கள் அதிகம் திணிக்கப்பட்டு இருந்ததால் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. இருந்தும் வசூலில் கவனிக்கப்பட்டது.
அதன்பிறகு உடல் எடை அதிகமாக இருந்த கீர்த்தி சுரேஷ், ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானார். இதனால் 2019ஆம் ஆண்டு எந்த படங்களிலும் கமிட் செய்யாமல் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ளார்.
ஆனால் அவரது நெருங்கிய வட்டாரங்கள் அம்மணி பாலிவுட் பக்கம் செல்ல யோசனை செய்து கொண்டிருந்ததால் படங்களில் நடிப்பதை தவிர்த்ததாகவும் கூறுகின்றனர். இதனால் தமிழில் 2019ஆம் ஆண்டு எந்த படமும் வெளிவரவில்லை.
பாலிவுட் செல்லும் முனைப்பில் இருப்பதால் அந்த கதை தேர்வில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் கூட கவர்ச்சியில் நடிப்பதற்கு சம்மதம் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன.
பாலிவுட் சினிமாக்களில் சாதாரணமாகவே கவர்ச்சி பெரிய அளவில் இருக்கும்.
அதனாலேயே இந்த முடிவுக்கு கீர்த்தி சுரேஷ் வந்திருப்பதாக தெரிகிறது. அப்படியே வாழ வைத்த தமிழ் மண்ணை மறந்துடாதீங்க மேடம்!
