vikram keerthysuresh

முன்னணி ஹீரோக்களின் பார்வை மொத்தமும் கீர்த்தி சுரேஷ் பக்கமே திரும்பியிருப்பதால், அவர் பேங்க் கணக்கில் அநியாயத்துக்கு லட்சங்களும் கோடிகளும்! பெருமாள் உண்டியலே நிரம்பினாலும், க்யூவில் நின்று மறு உண்டியலுக்காக காத்திருக்கும் பக்தனை போல கீர்த்தி சுரேஷின் கால்ஷீட்டுக்காக எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் காத்திருக்க தயாராகிவிட்டார்கள் சில ஹீரோக்கள்.

அதிகம் படித்தவை:  கெட்டவனுக்கும் கெட்டவன் கேடு கெட்டவன் - விக்ரம்வேதா கதையை சொன்னார் விஜய்சேதுபதி

அந்த வரிசையில்… ஐயோ பாவம். நம்ப விக்ரமும்!

அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகினார்களாம். “அவருக்கு நான் ஜோடியா? அவரு என்னைவிட முப்பது வயசாவது ஜாஸ்தி இருப்பாரே…” என்றெல்லாம் தேவையில்லாமல் பேசி டென்ஷன் ஏற்றிவிட்டாராம் அவர். போனவர்கள் பல்லை கடித்தபடியே திரும்ப… இவர்கள் கேட்ட அதே தேதிகளை தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கக் கொடுத்துவிட்டார்.