fbpx
Connect with us

Cinemapettai

ராட்சசனை விட பத்து மடங்கு பயமுறுத்தும் கீர்த்தி சுரேஷின் பென்குயின்.. மிரட்டல் டிரெய்லர்

Videos | வீடியோக்கள்

ராட்சசனை விட பத்து மடங்கு பயமுறுத்தும் கீர்த்தி சுரேஷின் பென்குயின்.. மிரட்டல் டிரெய்லர்

ஏண்டா உடல் எடையை குறைத்தோம் என ஏற்கனவே கீர்த்தி சுரேஷ்(Keerthy Suresh) கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கதை கூற எந்த இயக்குனர்களும் அவர் பக்கம் செல்லாமல் இருப்பது அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக பாலிவுட் சினிமாவை நம்பி தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் வந்த கதைகள் எல்லாம் உதறித் தள்ளினார் கீர்த்தி சுரேஷ். அதன் விளைவே தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட்டில் உங்களுக்கு இந்த கதை பொருத்தமாக இருக்காது என திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பென்குயின் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜூன் 19-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் பெண்குயின் டிரைலரை தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ராட்சசன் படத்தை விட பத்து மடங்கு அதிகமான பயமுறுத்தும் காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ள இந்த படம் ஒரு சைக்கோ த்ரில்லர் படம் என்பது ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.

இதோ ட்ரைலர் லின்க்:

Continue Reading
To Top