Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒருவழியா ஓகே சொன்ன நடிகர்.. உடம்பை குறைச்சது வீண்போகவில்லை என பெருமூச்சு விட்ட கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் என்ற ஒரு நடிகையின் சுவடு தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஹிந்தி பட வாய்ப்பை நம்பி பல படங்களில் நடிக்க வேண்டிய வாய்ப்புகளை உதறி தள்ளி விட்டு சென்றார். அதன் பலன் தான் தற்போது அதிக அளவு படவாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை கவர தவறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்ததில் ரசிகர்களுக்கு பெரிய ஈடுபாடு இல்லை.
சர்கார் படத்திற்கு பிறகு தமிழில் எந்த படவாய்ப்புகளும் இல்லாமலிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்கள் ஓரளவு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
தற்போது கேரளாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான மரக்காயர் எனும் சரித்திரப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இருந்தாலும் கைவசம் முன்னர் இருந்ததை போல பட வாய்ப்புகள் வருவதில்லை. இதனால் கவலையில் இருந்த கீர்த்தி சுரேஷுக்கு தற்போது பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனால் தற்போதைக்கு கீர்த்தி சுரேஷின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல வெளிச்சம் பளிச்சென்று அடிக்குதாம்.
