Tamil Cinema News | சினிமா செய்திகள்
படக்குழுவுக்கு தங்க காசை ஸ்பெஷல் கிஃப்ட் ஆக கொடுத்த கீர்த்தி சுரேஷ் !
சண்டக்கோழி 2
2005 இல் ரிலீஸான ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றது. கீர்த்தி சுரேஷ், விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், அர்ஜெய், கஞ்சா கருப்பு, ராம்தாஸ், ஹரிஷ் பெராடி, சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை விஷால் பிலிம் பேக்டரி மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. லிங்குசாமி இயக்கியுள்ளார்.

sandakozhi 2
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசி நாள் ஷூட்டிங்கில் ‘சண்டக்கோழி 2’ டீமுக்கு (150 நபர்கள்) நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு கிராம் தங்க நாணயத்தை பரிசாகக் கொடுத்துள்ளாராம்.
A good heart that made everyone on the sets of #Sandakozhi2 emotional as @KeerthyOfficial gifted 150 member crew with 1Gram Gold coin each on the day of her farewell.First of the kind actress to do such a beautiful deed. @VishalKOfficial @dirlingusamy @VffVishal @Jagadishbliss pic.twitter.com/5wHEHGePVe
— meenakshisundaram (@meenadmr) August 10, 2018
இதற்கு முன்பு கூட நடிகை சாவித்திரியின் பயோபிக் ஆன , ‘நடிகையர் திலகம்’ படக்குழுவினருக்கும் கடைசி நாள் ஷூட்டிங்கின் பொழுது கீர்த்தி சுரேஷ் தங்க நாணயம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
