தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இவர் அனைத்து காட்சிகளையும் ஒரே டேக்கில் நடித்து நடிகர் விஜய்யிடம் பாராட்டு வாங்கியுள்ளாராம்.