fbpx
Connect with us

Cinemapettai

கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக நடித்த காட்சியை பார்த்துள்ளீர்களா? வாயை வைத்து வீடியோவை கண்டுபிடித்த நெட்டிசன்கள்

Videos | வீடியோக்கள்

கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக நடித்த காட்சியை பார்த்துள்ளீர்களா? வாயை வைத்து வீடியோவை கண்டுபிடித்த நெட்டிசன்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். பாம்பு சட்டை, ரஜினிமுருகன் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ்(Keerthy Suresh) அதன்பிறகு விரைவில் முன்னணி நடிகையாக மாறினார்.

தளபதி விஜய்யுடன் பைரவா படத்தில் ஜோடி போட்ட பின்னர் இவருக்கு தமிழ் சினிமாவில் மவுசு கூடியது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் சினிமாக்களிலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். கதையின் நாயகியாகவும் இவர் நடித்த மகாநதி படம் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அமேசான் ப்ரைம் இல் ஜூன் 19-ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த பெண் குயின் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பேர்பட்ட கீர்த்தி சுரேஷ் தனது சிறு வயது குழந்தை நட்சத்திரமாக நடித்த காட்சிகள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. அப்போது கூட அவரது வாய் வைத்துதான் கண்டுபிடிக்க முடிந்தது என்கிறார்கள் நெட்டிசன்கள்.

ஒரு நடிகை தனது வாய் அமைப்புக்காக இவ்வளவு நெகட்டிவ் கமெண்ட்ஸ் இதற்கு முன் வாங்கி இருப்பாரா என தெரியாது. அந்த சமயத்தில் வெறுத்துப்போய் கீர்த்தி சுரேஷ் வலிய வந்து பேட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top