ஹீரோயினுக்கெல்லாம் கீர்த்தி சுரேஷ் கொடுத்த நெத்தியடி.. சிலாகிக்க வைத்த நடிகையர் திலகம்

தமிழ் சினிமாவில் பல ஹீரோ, ஹீரோயின்கள் வளர்ந்து உச்சம் தொட்டுவிட்டால் பழசை நினைத்து கூட பார்ப்பதில்லை. இவர்களுக்கெல்லாம் முன்னோடியாய் நடிகையர் திலகம் கீர்த்தி சுரேஷ் விளங்கி விட்டார். ஏறி வந்த ஏணி படிக்கட்டுகளுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

2000ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படம் தான் தமிழில் இவருக்கு ஹீரோயினாக அறிமுகம் தந்த முதல் படம். அதன் பின் தமிழ் மார்க்கெட்டை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

சூர்யா, விஜய் என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வந்தார். விஜய்யுடன் லவ் என்று கூட கிசுகிசுக்கப்பட்டார். இந்த வருடத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு இதுவரை மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது. ரகு தாத்தா, கல்கி, சைரன் என நடித்த இவருக்கு இந்த படங்கள் கை கொடுக்கவில்லை.

இரண்டு முதல் மூன்று தோடிகள் வரை மட்டுமே இதுவரை சம்பளம் வாங்கி வருகிறார் கீர்த்தி சுரேஷ். ஆனால் விளம்பரம் மற்றும் இன்ஸ்டா ஆகியவற்றில் வசூலை வாரி குவிக்கிறார், நூறு கோடிகள் வரை அதிலேயே சம்பாதித்து விடுகிறார்.

சிலாகிக்க வைத்த நடிகையர் திலகம்

இப்பொழுது கீர்த்தி சுரேஷ் சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் இதுவரை தான் பணியாற்றிய படங்களின் தயாரிப்பாளர்களுக்கு, தனித்தனியாக கடிதம் ஒன்றை எழுதி சிறப்பான பரிசையும் அதனோடு அனுப்பியுள்ளார்.

இப்படி வளர்த்து விட்ட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறும் பழக்கம் இல்லாத ஹீரோயின்களுக்கு இது ஒரு நெத்திய அடியாக அமைந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் இப்படி செய்தது மொத்த தமிழ் திரையையும் சிலாகிக்க வைத்துள்ளது. ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News