Tamil Cinema News | சினிமா செய்திகள்
அவங்க ரோல் மாடலாக இருந்தாலும், திறந்த மேனியாக நடிக்க முடியாது.. பரபரப்பைக் கிளப்பிய கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த ‘மகாநதி’ படம் தேசிய அளவில் இவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தது.
இந்நிலையில் பிரபல நடிகையான த்ரிஷாவை நாசுக்காக கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் விமர்சித்து இருப்பது திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை த்ரிஷா. இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்.
இவ்வாறு இருக்க கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நான் த்ரிஷாவை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு திரைத்துறையில் பயணம் செய்வேன். ஆனால், அவரை போல அங்கங்களை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.
இவ்வாறு கீர்த்தி சுரேஷ், த்ரிஷாவை நாசுக்காக விமர்சித்து இருப்பது திரைத்துறையினரை ஷாக் ஆக்கியுள்ளது மட்டுமல்லாமல் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த செய்தியை அறிந்த த்ரிஷாவின் ரசிகர்கள், கீர்த்தி சுரேஷின் மீது கடுப்பாகி உள்ளனர்.
