இறுக்கமான உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. சைடு போஸில் ஒரு மார்க்கமா இருக்கியேமா!

சினிமா துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கியிருந்தாலும் தமிழகத்தில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

மேலும் கீர்த்தி நடித்து வெளியான ‘மகாநதி’ படத்தின் மூலம் இவருக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் ஏ ஆர் ரகுமானுடன் இணைந்து படம் பார்த்ததாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டு இருப்பதோடு, பல ஸ்டைலிஷ் புகைப்படங்களையும் பதிவிட்டு இருக்கிறார்.

அதாவது இசை ஜாம்பவான் ரஹ்மான் கதை எழுதி, இசை அமைத்து, தயாரித்திருக்கும் திரைப்படம்தான் ‘99 சாங்ஸ்’ இந்தப் படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

மேலும் ஏகான் பட் மற்றும் எடில்சி வர்கஸ் ஆகியோர் இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர் என்பதும், இந்தப் படத்தில் 14 பாடல்கள் உள்ளது என்பதும் 99 சாங்ஸ் படத்தை பற்றிய கூடுதல் தகவல்.

இந்தப்படத்தை கீர்த்தி சுரேஷ் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து நேற்று மாலை கண்டதாக தெரிகிறது. இதுபற்றி கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘இந்த இனிய மாலை வேளையில் என்னை உங்களுடன் இணைத்துக் கொண்டதற்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷின் இந்தப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகுவதோடு, அவருடைய ஸ்டைலிஷான புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

keerthy-suresh-3
keerthy-suresh-3