Tamil Cinema News | சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு.! அதிர்ச்சியில் இயக்குநர்கள்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் வெளியானது. இந்த படத்துக்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்தது. ஏற்கனவே, சமூக வலைத்தளத்தில் ட்ரோல்கள், மீம்கள் அதிகம் பெற்ற கீர்த்தி சுரேஷ் தான் நாயகி. சாவித்ரியாக அவரால் ஜொலிக்கவே முடியாது என பழம்பெரும் நடிகைகள் அடித்துக் கூறியபோதும், அமைதியாகவே இருந்தார்.
ஆனால், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அனைவரும் கப்சிப் ஆகினார். தொடர்ந்து, படத்தின் ரிலீஸுக்கு பிறகு கீர்த்தியின் நடிப்பு பலரிடத்திலும் அப்ளாஸை தட்டி இருக்கிறது. சாவித்ரியின் காதல் கணவர் ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். சாவித்ரியின் தோழியாக ஷாலினி பாண்டே, பத்திரிக்கையாளர்களாக சமந்தா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் முக்கிய வேடம் ஏற்று இருந்தனர். படம் ரிலீஸானதில் இருந்து சாவித்ரியின் வாழ்க்கையில் இத்தனை நடந்து இருக்கிறதா என பல தரப்பிலும் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வருகிறது. படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருந்தார்.
தமிழில் ஏற்கனெவே விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தாலும், அந்த படங்கள் மூலம் கிடைக்காத பெயர் நடிகையர் திலகம் படம் மூலம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. இதனால் அம்மணி பயங்கர குஷியில் இருக்கிறார். இந்த சூழலில் கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்த பின்னரே அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆவது என அவர் திடீரென முடிவெடுத்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய கீர்த்தி, `மகாநதி படத்துக்கு முன்பே தமிழில் விஜய், விக்ரம் மற்றும் விஷால் ஆகியோரின் படங்களில் நடிக்க நான் ஒப்பந்தமாகி இருந்தேன். ஆனால், நடிகையர் திலகம் படத்தில் கதையின் நாயகியாக நடித்ததால் அதிகப்படியான கால்ஷீட் தேவைப்பட்டது. இது சம்பந்தமாக தமிழில் நான் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த படக்குழுவினரிடம் பேசிய போது, எனக்காக தேதிகளை அட்ஜஸ்ட் செய்து கொண்டு நடிகையர் திலகம் படத்துக்காக அதிக கால்ஷீட் ஒதுக்க உதவினர். அதேபோல், விஜயின் சர்கார் படத்தில் நடிக்க ஏற்கனவே கால்ஷீட் கொடுத்திருந்தேன். மகாநடி ஷூட்டிங்கால் சர்கார் படத்துக்குக் கொடுத்த தேதிகளில் என்னால் நடிக்க முடியவில்லை. ஆனால், சர்கார் படக்குழு எனக்காக விட்டுக் கொடுத்ததுடன், காத்திருக்கவும் செய்தனர்.
நடிகையர் திலகம் படத்தை முடித்துக் கொடுத்த பின்னர்தான் விஜயின் சர்கார் படத்தில் நடித்தேன். அதேபோல், விக்ரமின் சாமி – 2 மற்றும் விஷாலின் சண்டைக்கோழி – 2 ஆகிய படங்களுக்கும் என்னால் சரியாக கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. எனது நிலைமையை அந்த படக்குழுவினரும் புரிந்து கொண்டனர். இப்படி முன்னணி நடிகர்களே எனக்காக விட்டுக் கொடுத்தனர்.
இதனால்தான் நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொடுத்த பின்னரே புதிய படங்களில் ஒப்பந்தமாவது என முடிவு செய்திருக்கிறேன். இதனால், என்னிடம் கதை சொன்ன இயக்குநர்களை கொஞ்ச காலத்துக்குப் பொறுத்திருக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். நமக்காக விட்டுக் கொடுத்தவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதுதானே சரியாக இருக்கும்’’ என்கிறார் நடிகையர் திலகம் நாயகி கீர்த்தி சுரேஷ்.. நீங்க கலக்குங்க சேச்சி.
