யாரும் கூப்பிடாததால்.. பாலிவுட் ரீமேக் படத்தில் நடிக்கத் தயாராகி விட்ட கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படம் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இருப்பினும் இப்படம் இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதனை அடுத்து இரண்டாவதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் மூலமாகவே இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்தில் ஜோடி சேர்ந்தார். பின்னர் விஜயுடன் சர்க்கார், விக்ரமுடன் சாமி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கி முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார்.

இவ்வாறு சாதாரண கதாபாத்திரங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷிற்கு மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மகாநதி என்ற பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான இப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றார்.

இதனையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்ற கீர்த்தி சுரேஷுக்கு, எப்போதுமே பாலிவுட்டில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதற்காகவே தனது உடலை குறைத்து எலும்பும் தோலுமாய் மாறி காத்திருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் நயன்தாரா, சமந்தா போன்ற நடிகைகளுக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.

keerthi-suresh-cinemapettai-01
keerthi-suresh-cinemapettai-01

தனக்கு மட்டும் ஏன் யாரும் வாய்ப்பு தராததால், சோகத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷிற்கு, அதற்குப் பதிலாக தற்போது வேறு ஒரு ஐடியாவை யோசித்து வைத்திருக்கிறார். என்னவென்றால் பாலிவுட்டில் ஹிட் அடித்த படத்தையாவது ரீமேக் செய்து, அங்கிருக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பார்வையில் தென்பட வேண்டும் என்ற முயற்சியில் கீர்த்தி சுரேஷ் ஈடுபட்டு வருவதாக தகவல் கசிகிறது.

ஆனால் பாலிவுட்டிலே புதிய கதைகள் ஏதுமின்றி தென்னிந்திய படங்களின் கதைகளை வாங்கி பல கோடி ரூபாய்க்கு ரீமேக் செய்து வருகின்றனர். இதற்கு மாறாக கீர்த்தி சுரேஷின் இந்த புது முயற்சி செல்லுபடியாகுமா? என்பதே அவருடைய நெருங்கிய நண்பர்களின் கேள்விக்குறி.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்