Tamil Cinema News | சினிமா செய்திகள்
22 கிலோ உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ் அக்கா.. மலைபோல் இருந்தவர் சிலை போல் ஆன புகைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு அக்கா இருக்கும் விஷயமே தற்போது தான் தெரிய வந்துள்ளது. அவரது அக்கா பெயர் ரேவதி சுரேஷ்.
பார்ப்பதற்கு கீர்த்தி சுரேஷ் போலவோ அல்லது அவரது அம்மா மேனகா போலவோ அழகாக இருந்திருந்தால் ஒருவேளை ரசிகர்களுக்கு ரேவதி சுரேஷ் என்பவரை அடையாளம் தெரிந்திருக்கும். ஆனால் ரேவதி சுரேஷ் ஆரம்பத்தில் இருந்தே உடல் எடை பிரச்சனையை சந்தித்து வந்தாராம்.
தன்னுடைய ஆரம்பகால கட்டத்திலிருந்து அம்மா மற்றும் தங்கை ஆகியோருடன் ஒப்பிட்டு தன்னை பலரும் கிண்டல் அடித்து வந்ததாக வருத்தப்பட்டுள்ளார். மேலும் அவர்கள் போல் அழகாக இருந்திருந்தால் நானும் இன்று பிரபலமானவராக இருந்திருப்பேன் என கூறியுள்ளார்.
ஆனால் விடாமுயற்சியால் தன்னுடைய பருமனான உடலை கிட்டத்தட்ட 22 கிலோ வரை எடையை குறைத்து தற்போது கீர்த்தி சுரேஷுக்கே சவால்விடும் அளவுக்கு அழகான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

keerthisuresh-sister-revathi
பெரும்பாலும் சமூக வலைதளங்களில் தன்னுடைய உடல் எடை கூடி இருப்பதை காரணம் காட்டி வராமலிருந்த ரேவதி சுரேஷ் தற்போது உடல் எடை குறைத்த பிறகு தன்னுடைய கணவருடன் ரொமான்டிக் புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.

revathy-suresh-cinemapettai
தற்போது 22 கிலோ உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ் அக்கா ரேவதி சுரேஷ் புகைப்படம்தான் இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. மேலும் தன்னுடைய உடல் எடை கூடியிருந்தபோது தான் பட்ட பல அவமானங்களை நெகிழ்ச்சி பொங்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ரேவதி சுரேஷ்.
