Connect with us
Cinemapettai

Cinemapettai

keerthi-suresh-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷ் பட வில்லனுக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. எதிர்பார்ப்பை கிளப்பிய புதிய படம்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தென் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கிடைக்கும் பட வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வருவது சோகத்தை கொடுத்துள்ளது. அதற்கு காரணம் உடல் எடையை குறைத்ததுதான் என்கிறார்கள்.

தமிழில் பாம்பு சட்டை படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு முதல் படத்திலேயே ஸ்டார் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் வெளியான ரெமோ படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேசை ரசிகர்கள் தேவதை ரேஞ்சுக்கு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். தன்னுடைய அழகான முக தோற்றத்தாலும், கொழுக் மொழுக் தேகத்தாலும் ரசிகர்களை கட்டிப் போட்டார்.

keerthi-suresh-cinemapettai-01

keerthi-suresh-cinemapettai-01

அதனால் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். ஆனால் சமீபத்தில் யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்தார் என்பதுதான் தெரியவில்லை. 28 வயதிலேயே 40 வயது ஆன்ட்டி போல தோற்றமளிக்கிறார்.

இதனால் பல முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் கைவிட்டு சென்றது. தற்போது தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா என்ற ஒரே ஒரு படம் மட்டும் தான் கைவசம் உள்ளது. அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பிரபல நடிகர் டோவினோ தோமஸ் ஜோடியாக வாசி என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

vaashi-keerthi-suresh

vaashi-keerthi-suresh

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மோகன்லால் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டோவினோ தோமஸ் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் என்பதும் கூடுதல் தகவல்.

Continue Reading
To Top