நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சமீபத்திய படங்கள் எல்லாம் எஸ் என்ற எழுத்தில் தொடங்குகிறது.

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தில் தொடங்கிய அவர் பயணம் இன்று நடிகையர் திலகம் வரை நீண்டு இருக்கிறது. தனுஷுடன் நடித்த தொடரி படம் அவருக்கு சினிமா உலகில் ஒரு அங்கீகாரத்தை பெற்று தந்தது. இருந்தும் அப்படத்திற்காக சமூக வலைத்தளத்தில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டவர் கீர்த்தி. தொடர்ந்து, விஜயுடன் பைரவா, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயனுடன் ரெமோ என பல வெற்றி படங்களில் நடித்தார். கோலிவுட்டில் தற்போது மாஸ் ஹீரோக்களின் நாயகிக்கான தேடலில் முதலிடத்தை பிடித்து இருக்கிறார்.

keerthi suresh
keerthi suresh

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சாவித்ரி. இவரின் வாழ்க்கை வரலாறு நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும், மகாநடி என்ற பெயரில் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தில் கீர்த்தி ஒப்பந்தமான புதிதில் இவர் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என பலரும் வெளிப்படையாகவே கமெண்ட் அடித்தனர். அதையெல்லாம் கீர்த்தி கண்டுக்கொள்ளவில்லை. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே பலரின் வாயையும் அடைத்தது. படத்தில் கீர்த்தியின் நடிப்புக்கு பல தரப்பிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இப்படத்தை தொடர்ந்து கீர்த்தி கோலிவுட்டில் காஸ்ட்லியான நடிகைகள் பட்டியலில் இணைந்து இருக்கிறார்.

இந்நிலையில், கீர்த்தி கைவசம் இருக்கும் சமீபத்திய படங்கள் எல்லாம் எஸ் என்ற எழுத்தில் தொடங்கும் சுவாரசிய தகவல் வைரலாகி வருகிறது. விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ‘சர்கார்’, விஷாலுடன் நடித்து வரும் ‘சண்டக்கோழி 2’, விக்ரமுடன் ஜோடி போட்டு இருக்கும் ‘சாமி2’, அட கௌரவ வேடத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் ‘சீமராஜா’ ஆகிய படங்கள் எல்லாம் ‘எஸ்’ எழுத்தில் வரும் தலைப்புகளில் தொடங்குகிறது.