Connect with us
Cinemapettai

Cinemapettai

keerthi-suresh-bollywood

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே.. உடம்ப குறைக்க சொல்லி ஏமாத்திட்டாங்க என அழும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் சீக்கிரம் பெரிய ஆளான நடிகைகள் சிலர் தான். அதில் மிக முக்கிய இடம் கீர்த்தி சுரேஷுக்கு உண்டு. அறிமுகமான முதல் இரண்டு படங்களிலேயே உச்ச நடிகருக்கு ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். பிறகு நடிக்க தெரியவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதையும் முறியடிக்கும் வகையில் கீர்த்தி சுரேஷ் மகாநதி என்ற படத்தில் நடித்து தேசிய விருது வாங்கினார். அதன்பிறகு நடிக்கத் தெரியவில்லை என்று சொன்னவர்கள் கப்சிப். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் ஆகிய சினிமா உலகிலும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரிப்பில் அஜய்தேவ்கன் நடிக்கும் மைதான் எனும் படத்தில் கமிட்டானார். சமீபத்தில்கூட போனி கபூர் தனது அலுவலகங்களை கீர்த்தி சுரேஷுக்கு சுற்றி காட்டிய புகைப்படங்கள் வைரல் ஆனது.

பாலிவுட் அறிமுகம் என்பதால் தனது கொளுகொளுப்பான உடல் தோற்றத்தை குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறினார் கீர்த்தி சுரேஷ். ஆனால் அதுவே அவருக்கு எமனாக அமைந்தது. மைதான் படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டி இருந்ததால் கீர்த்தி சுரேஷின் கொளுகொளுப்பான தேகம் சரியாக இருக்கும் என படக்குழு எண்ணி கமிட் செய்தது.

ஆனால் திடீரென்று அவர் உடல் எடையை குறைத்தால் சிறிது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு தாயாக நடிக்க உடல் பொருந்தவில்லை என படத்தில் இருந்து நீக்கி விட்டனர். இதனால் ஆசை காட்டி மோசம் செய்துவிட்டதாக வெளியில் தெரியாமல் மனதுக்குள்ளேயே அழுது கொள்கிறாராம்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்திற்கு நடிகை பிரியாமணியை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாறு தழுவி எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top