Tamil Cinema News | சினிமா செய்திகள்
சாவித்ரியை தொடர்ந்து ஜெயலலிதாவாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்..
நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியின் வேடத்தை அசால்ட்டாக செய்து முடித்த கீர்த்தி சுரேஷ் அடுத்து ஒரு வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 60களில் பிஸி நாயகியாக இருந்தவர் சாவித்ரி. ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என முன்னனி நாயர்களின் படத்தில் நடித்து வெற்றி பெற்றார். நாயகிக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் என்பதால் எல்லாமே மாஸ் ஹிட் அடித்தது.
தன்னுடன் பணியாற்றிய ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உச்சத்திலே யாரும் சென்று விட முடியாது என்பதற்கு சாவித்ரி தான் உதாரணம். ஒரே நேரத்தில் அவருக்கு துன்பங்கள் படையெடுத்தது. ஜெமினி கணேசனுடன் திருமண முறிவு, தொடர் தோல்வி படங்கள் என பல கஷ்டங்களை பட்டார். அதற்கு துணையாக மதுவை தேடினார். அதுவே அவரை கோமாவில் தள்ளி மீள முடியாமல் செய்தது.
தற்போது இவரின் வாழ்க்கை வரலாறு நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும், மகாநடி என்ற பெயரில் தெலுங்கிலும் உருவாகி வருகிறது. படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கின்றனர். சமந்தாவுக்கு படத்தில் ரிப்போட்டர் கதாபாத்திரம், பிரகாஷ் ராஜுக்கு பத்திரிக்கை ஆசிரியர் வேடம். சிவாஜி கணேசன், நாகேஸ்வர ராவ், என்.டி.ஆர் ஆகியோர் பாத்திரத்தில் அவர்களின் பேரன்களும், மகன்களும் நடிக்கின்றனர்.
படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. கீர்த்தி எப்படி சாவித்ரி வேடத்திற்கு செட்டாவார் என கேட்கப்பட்ட கேள்விக்கெல்லாம் தன்னால் அச்சு அசலாக அவரை உரித்து வைக்க முடியும் என நிரூபித்து விட்டார். இன்று இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இது கீர்த்தி சுரேஷ் திரை வாழ்வில் நல்ல முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வரலாறு படமாக்கப்படுகிறது. இதற்கான கதை, திரைக்கதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படக்குழு குறித்த தேர்வும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சாவித்ரியை கச்சிதமாக செய்த கீர்த்தியை ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, ஆந்திராவில் மறைந்த முதல்வர்கள் என்.டி.ராமராவ், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருவரது வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது.
