Videos | வீடியோக்கள்
வடமாநில பெண்ணாக அசத்தும் கீர்த்தி சுரேஷ்.. திடீரென வைரலாகும் குட்லக் சகி பட டீசர்
தமிழ் சினிமாவில் வந்த வேகத்திலேயே மிகப் பெரிய நடிகையாக வளர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த படங்கள் அனைத்துமே தொடர் வெற்றி பெற்றதால் முன்னணி நடிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
ஆனால் சமீபத்தில் உடல் எடையை குறைத்தால் அவருக்கு படவாய்ப்புகள் எதுவுமே சல்லவில்லை. இதனால் மீண்டும் தன்னுடைய உடல் எடையை கணிசமாக ஏற்றுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.
கைவசம் தெலுங்கில் நிதின் சத்யா என்பவருடன் ஒரு படமும், மகேஷ்பாபுவுடன் ஒரு படமும் வைத்துள்ளார். ஆனால் தமிழில் தற்போது வரை எந்த ஒரு படத்திலும் கமிட் செய்யப்படவில்லை.
சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே நடிகையர்-திலகம் எனும் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
இந்நிலையில் குட்லக் சகி என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ்க்கு ஜோடியாக நடிகர் ஆதி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.
ஒரு வட மாநிலத்தின் பின்தங்கிய நிலையிலிருந்து எப்படி துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஒலிம்பிக் நாயகியாக ஜொலிக்கிறார் என்பதுதான் படத்தின் கதையாக உள்ளது.
குட்லக் சகி பட டீஸர்:-
