தொடர்ந்து ப்ளாப்பான 5 படங்கள்.. கீர்த்தி சுரேஷ் உருப்படியாக எடுக்கப்போகும் அதிரடி முடிவு

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக சில சறுக்கல்களை சந்தித்து வருகிறார். தற்போது அவரின் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தாலும் அந்த படங்கள் கிட்டத்தட்ட கடைசியாக நடித்த எந்த படங்களும் தோல்வியை சந்தித்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு இவரின் அசத்தலான நடிப்பில் வெளிவந்த நடிகையர் திலகம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்காக கீர்த்தி சுரேஷ் ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்தார். ஆனால் அதன்பிறகு அப்படி ஒரு வலுவான கதாபாத்திரம் அவருக்கு கிடைக்கவில்லை.

சமீபத்தில் வெளிவந்த சாணி காகிதம் திரைப்படம் அவருக்கு பாராட்டை பெற்று கொடுத்தாலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அதைத் தொடர்ந்து தற்போது வெளியாகியிருக்கும் மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பட்டா திரைப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.

படத்தில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் இவர்களின் கெமிஸ்ட்ரி கொஞ்சமும் ஒர்க்கவுட் ஆகவில்லை என்பதுதான் ரசிகர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது. இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்ததை நினைத்து கவலையில் இருக்கும் கீர்த்தி எப்படியாவது ஒரு வெயிட்டான கேரக்டரில் நடித்து விட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்.

ஆனால் இவரின் தொடர் தோல்விகளை பார்த்த அவருடைய பெற்றோர்கள் சீக்கிரம் கீர்த்திக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே இப்படி ஒரு முயற்சியில் இருக்கும் அவர்களை கீர்த்தி தான் சமாதானப்படுத்தி திருமணத்தை தள்ளிப்போட்டு வந்துள்ளார்.

ஆனால் அவர்கள் இப்போது கீர்த்தியின் திருமணத்தில் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. கஷ்டப்பட்டு நடித்தும் பிரயோஜனம் இல்லாத நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது திருமணத்தைப் பற்றி யோசித்து கொண்டு இருப்பதாக இணையத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இதனால் கூடிய விரைவில் அவரின் திருமண செய்தியை நாம் எதிர்பார்க்கலாம்.

Next Story

- Advertisement -