Connect with us
Cinemapettai

Cinemapettai

keerthi-suresh-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொழிலதிபருடன் நெருக்கம் காட்டும் கீர்த்தி சுரேஷ்? ரகசிய சந்திப்பால் அம்பலமான காதல்

சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் பற்றிய அளவுக்கு அதிகமாக திருமண வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த முறை வந்தது வதந்தி இல்லை என்பது போலவே உறுதியான தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் கோலிவுட் வாசிகள்.

சில மாதங்களுக்கு முன்பு கூட கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வெளியான செய்தி இணையத்தை பரபரக்க வைத்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி சுரேஷ் தந்தை இருவருக்குள்ளும் அப்படி ஒரு நெருக்கமான பந்தங்கள் இல்லை எனவும், நண்பர்கள் மட்டும் தான் எனவும் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனால் சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் அளவுக்கு அதிகமாக பழகி வருவதாகவும், இருவரும் ரகசியமாக நட்சத்திர ஹோட்டல்களில் சந்தித்து கொள்வதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கள் எழ ஆரம்பித்துள்ளது.

முன்னர் போல் இப்போது கீர்த்தி சுரேஷுக்கு படவாய்ப்புகள் இல்லை என்பது உண்மைதான். இதனால் படவாய்ப்பு இல்லாத சமயத்தில் ஒவ்வொரு நடிகைக்கும் வரும் கிசுகிசுத்தான் கீர்த்தி சுரேஷுக்கும் வந்துள்ளது.

மேலும் கீர்த்தி சுரேஷ் தரப்பு தற்போது வரை இந்த ரகசிய உறவு பற்றி எந்த ஒரு மறுப்பு தெரிவிக்காத காரணத்தினால் விரைவில் கீர்த்திசுரேஷ் திருமணம் நடைபெறுவது உண்மைதான் என்பதை போலவே கூறி வருகின்றனர். இனியும் வாய் திறக்காமல் இருந்தால் அடுத்த வருடங்களில் பிள்ளை பிறந்து விட்டது என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

keerthi-suresh-cinemapettai-01

keerthi-suresh-cinemapettai-01

Continue Reading
To Top