Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிறிய ஹீரோக்களின் படங்களை தவிர்க்கும்…கீர்த்தி சுரேஷ்?
இதுவரை கீர்த்தி சுரேஷ் என்றால் நல்ல நடிகை, தொழிலை மதிக்கக்கூடியவர். குறித்த நேரத்திற்குள் ஸ்பாட்டிற்கு வந்து விடுவார் என்று அவரை வைத்து படம் இயக்கியவர்களே சான்றிதழ் கொடுத்து வந்தனர். ஆனால், இப்போது சிலர் புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள். அதாவது, விஜய், சூர்யா என்று நடிக்கத் தொடங்கிய பிறகு அதற்கு முன்பு கமிட்டான சில சிறிய ஹீரோக்களின் படங்க ளுக்கு கீர்த்தி சுரேஷ் போதுமான ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்கிறார்கள்.
ஆனால் இதுகுறித்து கீர்த்தி சுரேஷ்தரப்பில் கேட்டால், சின்ன படம், பெரிய படம் என்கிற வித்தியாசம் பார்க்காதவர் கீர்த்தி சுரேஷ். அதேபோல் எந்த படமாக இருந்தாலும் ஒரேமாதிரி நடிக்கக்கூடியவர். முக்கியமாக, தன்னை வைத்து படம் தயாரிப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த நேரத்தில் அப்பட வேலைகளை முடித்துக்கொடுப்பவர். ஒருசில நாட்களில் வேறு படத்தில் நடித் துக்கொண்டிருக்கும்போது வருவதற்கு காலதாமதமோ அல்லது ஓரிரு நாட்கள் தாமதமோ ஆகியிருக்கலாம். இது தவிர்க்க முடியாத ஒன்று. மற்றபடி வேண்டு மென்று யாரையும் கீர்த்தி சுரேஷ் அலட்சியப்படுத்துவதில்லை. அதனால் சிறிய ஹீரோ படங்களுக்கு அவர் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று சொல்வதை ஏற்க முடியாது என்கிறார்கள்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
